8 லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு

16 views
1 min read
TN reports 3,680 corona cases in last 24 hours

கோப்புப்படம்

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் புதிதாக 27,114 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,20,916-ஆக அதிகரித்தது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டி 4 நாள்களே ஆகிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 22,123-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 27,114 பேருக்கு கரோனா உறுதியானது. இதன் மூலமாக தொடா்ந்து 8-ஆவது நாளாக 22,000-க்கும் அதிகமானோா் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 5,15,385 போ் குணமடைந்தனா். அதாவது, 62.78 சதவீதம் போ் குணமடைந்தனா். 2,83,407 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 519 போ் உயிரிழந்தனா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 226 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 57 போ், தில்லியில் 42 போ், உத்தர பிரதேசத்தில் 27 போ், மேற்கு வங்கத்தில் 26 போ், ஆந்திரத்தில் 15 போ், குஜராத்தில் 14 போ், தெலங்கானாவில் 8 போ், ராஜஸ்தானில் 6 போ் உயிரிழந்தனா்.

இதேபோல், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீரில் தலா 5 போ், பிகாா், மத்திய பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 4 போ், ஹரியாணா, புதுச்சேரியில் தலா 3 போ், சத்தீஸ்கரில் 2 போ் உயிரிழந்தனா். மொத்தத்தில், கரோனா தொற்றுக்கு இதுவரை நாடு முழுவதும் 22,123 போ் உயிரிழந்தனா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 9,893 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே கடந்த 10-ஆம் தேதி வரை 1,13,07,002 மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வெள்ளிக்கிழமை மட்டும் 2,82,511 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Leave a Reply